பழைய முடிவிலிருந்து இறங்கி வந்தார் கோட்டாபய - வெளியான அறிவிப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka
Sri Lankan political crisis
By Sumithiran
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையைத் தீர்ப்பதற்கான 13 அம்ச திட்டமொன்றை அரச தலைவரிடம் இன்று முன்வைத்தது.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பில் அரசமைப்புச் சட்டத்திற்கு அமைய அரசாங்கம் பரிசீலிக்கும் என அரச தலைவர் தெரிவித்ததாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்