கிரீன்லாந்தை ட்ரம்பிடம் இருந்து பாதுகாக்க தயார் : ஈரான் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து கிரீன்லாந்தை பாதுகாக்க தயார் என ஈரான் ஒரு அதிரடியான கருத்தை முன்வைத்துள்ளது.\
டென்மார்க்கின் கிரீன்லாந்து தீவு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், அதை விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் கிரீன்லாந்து ஒரு விற்பனைப் பொருள் அல்ல என்று டென்மார்க் அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இருப்பினும் இராணுவ நடவடிக்கை மூலம் அதை ட்ரம்ப் கைப்பற்றுவார் என்ற அச்சமும் நிலவுகிறது.
ஈரான் காவல்துறை தலைவரின் அறிவிப்பு
இது ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஈரான், அமெரிக்காவிற்கு எதிராக ஒரு புதிய நகர்வை முன்னெடுத்துள்ளது.
Iran offer to PROTECT Greenland from Trump — ‘just ask… we’ll come’ pic.twitter.com/t0L7zqd2w0
— RT (@RT_com) March 21, 2026
அதன்படி"கிரீன்லாந்து ஒருமுறை கோரிக்கை விடுத்தால் போதும், அவர்களை அமெரிக்காவிடமிருந்து பாதுகாக்க ஈரான் உடனடியாகக் களமிறங்கும்" என்று ஈரான் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |