ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு ஈரான் அறிவித்த பெருந்தொகை கட்டணம்
Iran-Israel War
Strait of Hormuz
Iran-US Conflict
By Dilakshan
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சில கப்பல்களிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக ஈரான் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலாவுத்தீன் புரூஜெர்டி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
போருக்கான செலவு
இந்த நடவடிக்கை புதிய நிர்வாக முறை ஒன்றின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும், போருக்கு செலவுகள் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசு கொண்டிருக்கும் அதிகாரத்தையும் உரிமையையும் இந்த நடவடிக்கை காட்டுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான கடல்வழிப் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணையில் இப்படியொரு கட்டணம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்