மூன்று அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்!
2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு 50 கட்சிகள் அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் மூன்று கட்சிகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி என்பனவே இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.