நுகர்வுக்கு பொருத்தமற்ற உருளைக் கிழங்குகள் மீட்பு
Dambulla Economic Center
Health Division
Consumption
Potatoes
By MKkamshan
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள களஞ்சியசாலையிலிருந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உருளைக்கிழங்குகள் அடங்கிய கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகளால் இந்தக் கொள்கலன் மீட்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணைகளில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 40,000 கிலோகிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த உருளைக்கிழங்குகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உருளைக்கிழங்கு தொகையைப் பாவனைக்குப் பயன்படுத்தும் வகையில் சேவையாளர்களை கொண்டு பொதி செய்து சந்தைக்கு விநியோகிக்கத் தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி