யாழ் - ஊர்காவற்றுறையில் கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி
Jaffna
well
Kayts
Recovery body
By Mkkamshan
யாழ் - ஊர்காவற்றுறையில் சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊர்காவற்றுறை - நாரந்தனை வடக்கில் நேற்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது 4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளான். இதனையடுத்து பெற்றோர் தேடிய நிலையில், சிறுவன் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி