ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் : வெளியான மகிழ்ச்சித் தகவல்
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இரண்டு வகையான ஆட்சேர்ப்பு முறைகளின் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாவதாக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கு 2026.02.05ஆம் திகதி காலை 9.00 மணி வரை முதல் 19ம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைத் திணைக்களம்
இரண்டாவதாக திறந்த வகையிலான பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2026.02.20ஆம் திகதி காலை 9.00 முதல் 2026.03.05ம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பள்ளிகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் “Online Applications – Recruitment Exams/ E.B. Exams” ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பங்களை இணையவழி (Online) முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |