பெருக்கெடுத்தோடும் மகா ஓயா ஆறு - விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
Red Alert
Rain
SriLanka
Unpredictable Climates
Maha Oya
By Chanakyan
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அபாய நிலைமை தொடர்கின்ற நிலையில், மகா ஓயா பெருக்கெடுத்துள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான மற்றும் தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் ஏற்படக்கூடும் அபாயம் உள்ளதாக நீர்பாசன திணைக்களத்தைக் கோடிட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,