செங்கடலில் தொடரும் பதற்றம்..! பொருளாதார ரீதியில் பாதிப்பை சந்திக்கும் இந்து சமுத்திர பிராந்தியம்
செங்கடலில் காணப்படும் ஆபத்தான நிலைமை உட்பட பல காரணங்களால் இந்து சமுத்திர பிராந்தியம் பொருளாதார பலவீனங்களை எதிர்கொள்வதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஏழாவது இந்துசமுத்திர மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடற்பயண சுதந்திரத்தை உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செங்கடலில் தாக்குதல்
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் சமீபத்தைய தாக்குதல்கள் முக்கிய கடல்பாதைகளிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் இதன்காரணமாக இந்து சமுத்திரத்தில் எண்ணெய் மற்றும் கப்பல் கொள்கலன்கள் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய ஆபத்தையும் வெளிப்படுத்தியுள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்துசமுத்திரத்தின் முக்கிய பாதைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறிப்பாக செங்கடல் ஹோர்மஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உலகின் முக்கிய வர்த்தக மையமான சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சுதந்திர கடற்பயணத்தின் சட்டரீதியான மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டியுள்ள சிங்கப்பூர் அமைச்சர் அனுமதியின்றி வாடகையின்றி கப்பல்கள் பயணம் செய்ய அனுமதிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் சர்வதேச சந்திப்புக்களில் கலந்துகொள்ளும் புதிய முகம்!! அதிர்ச்சியில் வாடிய பழைய முகம்!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNELஇல் இணைந்து கொள்ளுங்கள்...! |