தேயிலைக்கான உரத்தின் விலையில் மாற்றம்
Mahinda Amaraweera
Sri lanka tea
By Beulah
தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உர மூடை ஒன்றின் விலையை 8500 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
“தற்போது உர மூடையொன்று 12,000 முதல் 14,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
தேயிலையின் நிறை
இதன் காரணமாக தோட்ட உரிமையாளர்கள் தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவது குறைவடைந்துள்ளது.
இதனால் ஒரு ஏக்கரில் பறிக்கப்படும் தேயிலையின் நிறை 216 கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலையில், தேயிலைக்கு பயன்படுத்தப்படும் உரத்தின் விலையை குறைத்து விற்பனை செய்வதற்கு அரசுக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை ! 4 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி