வடக்கின் அடையாளமாக மாறும் றீ(ச்)ஷா: ஊழியர்களுக்காக கொண்டு வந்த திட்டம்(காணொளி)
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதாக விளங்கி வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
அதன் அடுத்த கட்ட முயற்சியாக றீச்சாவில் பணியாற்றும் 300 ஊழியர்களுக்காக மருத்துவ பாசறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ பாசறையில் ஊழியர்களின் குடும்பங்களுக்கும் இலவசமாக அடிப்படை மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த மருத்துவ பாசறையானது,வாரத்தில் 2 நாட்கள் செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்