தைத்திருநாளை முன்னிட்டு ரீச்ஷாவின் மாபெரும் கபடி போட்டி
2026 ஆண்டின் தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு ரீச்ஷா ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கபடி போட்டி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள ரீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்று (14) காலை முதல் இந்தப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான அணிகள் கலந்து கொண்டு போட்டியிடுகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கபடியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் ரீச்ஷா இந்தப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
வெற்றியீட்டுபவர்களுக்கான பரிசு
கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை பெறுபவர்களுக்கு 100,000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை பெறுபவர்களுக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தை பெறுபவர்களுக்கு 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |