சிறிலங்கா அதிபரின் பதவிக் கால விவகாரம்: அம்பலமாகும் அரசாங்கத்தின் முயற்சி
சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து மக்கள் கருத்துக் கணிப்புக்கு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் சிறிலங்கா அதிபரின் பதவிக் காலம் குறித்து மக்கள் கருத்து கணிப்பை நடத்த உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கூட அரசாங்கத்தால் பெற முடியாது எனவும் எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
தந்திர வியூகம்
இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைத்த 17ஆம் திகதி, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அறிவிப்பை ஒத்திவைத்தால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் வழங்குது போல் ஆகிவிடும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |