சிறிலங்காவில் உருவெடுக்கும் புதிய அரசியல் சக்தி
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மேலும் சில கட்சிகள் மற்றும் தேசிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆண்டில், நாட்டுக்குச் சார்பான புதிய அரசியல் சக்தியை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this
