தப்பினார் பவித்ரா - வெளியானது புதிய தகவல்
விரைவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்த மாற்றம் நடைபெற உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் கீழ் ஒரு சில அமைச்சர் பதவிகள் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பரபரப்பாக பேசப்பட்ட சுகாதார அமைச்சர் பதவியில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜனாதிபதி செயலககத்தை மேற்கோள்காட்டி அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சை பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து நீக்கிய பின்னர் தற்போதைய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
எனினும் அவரது பதவியில் மாற்றம் எதுவும் செய்யப்பட்டமாட்டாது.
மாறாக ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளனர் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.