தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை - ரணில் வெளியிட்ட அறிவிப்பு
Ranil Wickremesinghe
Prisons in Sri Lanka
By Sumithiran
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 11 அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில், 21 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் சிறைதண்டனைக் கைதிகள் எனவும் , அதிபர் கூறினார்.
கைதிகளுக்கு பொது மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவதின் (1) சரத்துக்கமைய இறுதி இரண்டு பிரிவுகளிலுமுள்ள கைதிகளுக்கு மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குதல் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக கூறினார்.
அந்த பரிந்துரைகளை கருத்திற் கொண்டு 11 சிறைக்
கைதிகளை விடுவிப்பதற்காக நீதி மற்றும்
சிறைச்சாலைகள் அமைச்சருக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி