சீரற்ற கால நிலையினால் பாதிப்பா? அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் (காணொளி..)
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் எந்த பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டாலும் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நிலவும், அசாதாரண நிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு வானிலை அனர்த்தத்திற்கும் முகம்கொடுக்க தயாராக இருப்பதாக குறித்த நிலையம் அறிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி ( Pradeep Kodippili) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்க முடியும் எனவும் இது 24 மணி நேரமும் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பு,