ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை - வெளியான அறிக்கை
இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், கொரோனா தொற்றைகை் கட்டுப்படுத்த முன்னின்று செயற்படுவதாகவும் தாம் எங்கும் ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை என தெரிவித்துள்ளது.
. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய பங்கேற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து டாக்டர் பாதெனிய தலைமறைவாகியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து விளக்கமொன்றை அளிக்கும் வகையில் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில், கொரோனா நோயாளர்கள் சிகிச்சைபெறுகின்ற விடுதி அறைகளில் தொற்று பரவுவதென்பது யதார்த்தம்.
மருத்துவர்களோ அல்லது வேறு தரப்பினரோ ஒன்றாகக் குழுவாக அமர்ந்து உணவருந்துவது என்பது தற்காலத்தில் தகுதியற்ற செயற்பாடு.
எனினும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்வதற்கு சங்கத்திற்கு தைரியம் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.