தடைகளை விதியுங்கள் -இலங்கை தொடர்பில் உலக நாடுகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
srilanka
world
human rights
By Sumithiran
மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கும் நிலையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முரணாக காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் மனித உரிமைகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
உண்மையான முன்னேற்றத்திற்கு உலக நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.
தமக்கான நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஐக்கிய நாடுகளையும் சர்வதேசத்தையுமே நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி