மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கைக்கு அனுமதி
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Dilakshan
மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் முதல் மின் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (10) தெரிவித்துள்ளார்.
கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்த அதிகாரி, பொதுப் பயன்பாட்டுச் சட்டத்தின்படி மக்களின் கருத்துகளைப் பெற 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி வழங்கப்படும்
மேலும், இம்மாதம் 18ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மக்களிடம் வாய்மூல கருத்துக்களை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மக்களிடம் வாய்மூல கருத்துக்களை பெற்ற பிறகே அனுமதி வழங்கப்படும் கூறியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்