வடக்கில் மோசமான நிலைமை - தமிழ்க் கட்சிகளிடம் அவசர கோரிக்கை

Sri Lankan Tamils Ilankai Tamil Arasu Kachchi M A Sumanthiran S. Sritharan General Election 2024
By Thulsi Nov 16, 2024 03:39 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ்க்கட்சிகளின் பதவிச் சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு பல அணிகளாக பிரிவடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் அவர் இன்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம்

சமூக விரோதிகளை நிராகரித்த தமிழ் மக்கள்! இது ஆரம்பம் மட்டும் தான்.. சாணக்கியன் பகிரங்கம்

பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் 

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், 2009க்கு பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது.  காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருபவர்கள் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக வன் வலு கடந்த மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

வடக்கில் மோசமான நிலைமை - தமிழ்க் கட்சிகளிடம் அவசர கோரிக்கை | Request To Tamil National Parties

அதை எதிர்கொள்வது பாரிய சவாலாக உள்ளது. அதிலும் பிரிந்து நின்று எதிர்கொள்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆகவே ஒன்றாக இணைந்து அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழ்க்கட்சிகளின் பதவிச் சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு பல அணிகளாக பிரிவடைந்துள்ளனர். தமக்குள்ளான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும் இந்த தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கியது.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த்தேசிய கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

தமிழ் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன. அவற்றை அவர்கள் விரைவில் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

கொழும்பில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்: மனோ

கொழும்பில் இழக்கப்பட்ட தமிழர் பிரதிநிதித்துவம்: மனோ

வடக்கு மாகாண தேர்தல் களம் 

ஒரே இலக்கில் செயல்பட முனைவோர்கள் பிரிந்திருந்ததனால் வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டதால் தம்மை தற்காத்துக் கொண்டனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் ஆனால் வடக்கில் உள்ள நிலைமை மிக மோசமாகிவிட்டது.

வடக்கில் மோசமான நிலைமை - தமிழ்க் கட்சிகளிடம் அவசர கோரிக்கை | Request To Tamil National Parties

ஆளும் அரசே வெற்றி பெற்றிருப்பதனால் எமது தமிழ் தேசியவாத அபிலாசைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகின்றோம் என்கிற கேள்வி எழுகிறது. எனவே தமிழ்த்தேசிய கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும்.

இவ்வாறான ஐக்கியமில்லாவிட்டால் அசுர பலத்தோடு வெற்றி பெற்றுள்ள அரசை எதிர்கொள்ளக்கூடிய வலிமை தமிழர் தரப்பிடம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே எதிர்காலத்தில் நடைபெறுகின்ற தேர்தல்களிலும் சரி, தமிழ்த்தேசிய உரிமை ஜனநாயக போராட்ட விடயங்களிலும் சரி, ஒன்றாக இணைந்து எதிர்கொள்வதே அவசியமாகும். அதனையே மக்களும் விரும்புகிறார்கள்.

தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என கோரிக்கை

கடந்த பல வருடங்களாக இவ்வாறான ஐக்கிய முயற்சிகளை ஏற்படுத்தியவர்கள் என்கின்ற வகையிலும் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என கோரிக்கை விடுத்ததன் உரிமையிலும் எதிர்வரும் நாட்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருக்கின்றோம்.

வடக்கில் மோசமான நிலைமை - தமிழ்க் கட்சிகளிடம் அவசர கோரிக்கை | Request To Tamil National Parties

அதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும் ஆளுக்கு ஆள் துரோகிப்பட்டம் வழங்குவதும் ஒரு கட்சி வந்தால் இன்னொரு கட்சி வரமாட்டேன் எனக்கூறும் வரட்டு வாதங்களை அடியோடு மறந்து விடுங்கள் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

நடந்து முடிந்த தேர்தல் வடக்கு மாகாணத்தில் தமிழ்த்தேசிய நீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு தார்மீக பொறுப்பெடுக்க வேண்டியது சகல தமிழ்த் தேசியக்கட்சிகளும் ஆகும். தமது குறைபாடுகளையும், செயல்பாடின்மையும் இனிமேலாவது திருத்திக் கொள்வதற்கு முன் வர வேண்டும்.

ஆனாலும் தமிழ் மக்கள் இன ரீதியான சிந்தனை துவத்தை மறந்து தேசிய கட்சிக்கு வாக்களித்தது என்பது மிகவும் வேதனைக்குரிய பரிதாபகரமான நிலைப்பாடு ஆகும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை எனும் தோற்றப்பாட்டை வெளிப்படுத்திவரும் ஆபத்துண்டு.

அந்த மக்கள் எதிர்வரும் காலத்தில் தங்களுடைய எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நாம் கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் தேசிய கட்சிகளுக்குள் கரைந்து போவது என்பது தமிழ்த்தேசிய இருப்பை ஒருபோதும் கூர்மையாக தக்க வைக்க கூடிய கள நிலைமை உருவாகாது என்பதனையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எமது முயற்சிக்கு சகல கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் - வெளியான காரணம்

கம்பஹா மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் - வெளியான காரணம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்