தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை : தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேவையான நிதியை வழங்குவது தொடர்பான கோரிக்கையை சிறிலங்கா அதிபரின் செயலாளரிடம் முன்வைக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கடிதமொன்றை ஒப்படைக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா நிதி அமைச்சு மற்றும் திறைசேரியிடம் இந்த கோரிக்கையை ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்திருந்தாலும் அதற்கான பதில் இதுவரை வழங்கப்படாத நிலையிலேயே, தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 2.2 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இது தொடர்பான கோரிக்கையை ஆணைக்குழு ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முன்வைத்திருந்தாலும், அதற்கு பதிலளிக்க குறித்த தரப்பினர் தவறியுள்ளதாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சிறிலங்கா அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கடிதமொன்றை ஒப்படைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில ஊடகங்களில் தமிழ்தேசியத்தை கொண்டு சேர்த்த தராகி சிவராமின் நினைவு நாள் இன்று 59 நிமிடங்கள் முன்