மியான்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் மீட்பு
Sri Lanka
Myanmar
By Shalini Balachandran
மியன்மாரில் சட்டவிரோத சைபர் சென்டர் முகாமில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் மியான்மார் அரசின் தலையீட்டின் பேரில் மீட்பு பணி நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகத்திற்ககு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சொந்த நாடு
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மியான்மாரில் உள்ள மியாவாடி மத்திய காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் மீட்கப்பட்ட நபர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்