கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடாளுமன்றில் குரல்கொடுத்த அனுர
நாட்டில் உள்ள கிராம உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தமது தொழில்சார் நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று (22) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
கிராம உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ சேவையை ஸ்தாபிக்காமை, தனித்துவமான சம்பளம் கிடைக்காமை, தேவையற்ற அழுத்தங்கள் போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உத்தியோகபூர்வ விடுமுறை மற்றும் வேலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு
கிராம உத்தியோகத்தரின் சேவையானது எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை நீண்டகாலமாகியும் அவர்களது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் அனுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |