இலங்கையில் நிலக்கரி அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதில்லை : கஞ்சன விஜேசேகர
Parliament of Sri Lanka
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Shadhu Shanker
இலங்கையில் நிலக்கரி அனல் மின் நிலையங்களை நிர்மாணிப்பதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மின்சார சபை மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவர், சம்பூரில் நிலக்கரி அனல்மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்திற்கு பதிலாக சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.