ஜப்பானிய தூதுவரிடம் சஜித் முன்வைத்த கோரிக்கை!
கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் முன்னெடுத்து வரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Isomata Akio) இடையிலான சந்திப்பொன்று இன்று (01.12.2024) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போதே, குறித்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஜப்பான் தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
ஜப்பான் - இலங்கை இராஜதந்திர உறவு
அத்துடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் இராஜதந்திர உறவை தொடர்ந்தும் பேணுமாறும், இதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை பெற்றுத் தருவதாகவும் சஜித் ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் முன்னெடுத்து வரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறும், இதற்குத் தேவையான பூரண ஆதரவை எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தாம் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தனவும் கலந்து கொண்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்