அரச ஊழியர்களின் மொழி அறிவு குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
மொழிகளைக் கற்றுக்கொள்ளும் அரச ஊழியர்களின் மொழி அறிவு குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின் திறன்கள் தொடர்ந்து பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதிகாரிகளுக்குப் பணிப்புரை
இதன்போது, சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொண்ட அரச ஊழியர்கள், அந்த மொழிகளை முறையாகப் பயன்படுத்துகின்றனரா என்பது குறித்து மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் நீதியமைச்சின் மேலதிக செயலாளர் வி.மதுமதி, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சந்திரா விக்ரமசிங்க, அதன் பணிப்பாளர் நாயகம் ஷமிந்த மஹலேகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |