அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டிலுள்ள அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யாவிட்டால் எதிர்காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஏற்பாட்டில் நேற்று (30) மாத்தறையில் (Matara) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மின் கட்டணம் குறைக்கப்படும்
இதேவேளை எதிர்காலத்தில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்களுடைய அரசாங்கத்தால் தொடர்ந்து மின்சாரம் வழங்க முடியாது என்று கூறினர். நாங்கள் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வோம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்று கூறப்பட்டாலும் குறைந்த விலையில் தொடர்ந்து எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய முடிந்ததாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |