நான் தவறு செய்திருந்தால் மரண தண்டனை வழங்குங்கள் - நாடாளுமன்றில் ரிஷாட்
sri lanka
people
parliament
By Shalini
நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் இன்று நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர், தான் கைது செய்யப்பட்டு 22 நாட்களுக்கு மேல் சென்றுள்ளபோதும் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத தன்னை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இவ்வாறு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்