அரிசி விலை இன்று மீண்டும் அதிகரித்தது - சில பகுதிகளில் தட்டுப்பாடு?
rise
shortage
rice price
By Sumithiran
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியதை அடுத்து ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர், அரிசி விலை மீண்டும் இன்று அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டரிசி கிலோ 15 ரூபா சம்பா கிலோ 10 ரூபா கீரி சம்பா கிலோ 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி, அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலை அறிவிக்கப்பட்டது. இதன்படி 1கிலோ நாட்டரிசி 115 ரூபாவாகவும், 1கிலோ சம்பா அரிசி 140 ரூபாவாகவும், 1கிலோ கீரி சம்பா 165 ரூபாவாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், அரிசிக்கான விலை இன்று அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.