உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு: நீதிமன்றத்தை நாடத் தயாராகும் ரிஷாட்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தம்மை தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
தம்மை இலக்காகக் கொண்டு சில தரப்பினரால் வெளியிடப்படும் ஆதாரமற்ற கருத்துகளை தாம் முற்றாக நிராகரிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தமக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இந்நிலையில், மீண்டும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

எனவே, தமது பெயரைப் பயன்படுத்தி பொய்யான கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |