ஈரானில் அதிகரிக்கும் மரண தண்டனைகள்! ட்ரம்ப் கடும் கண்டனம்
மத்திய கிழக்கு போர் தொடங்குவதற்கு முன்பு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களுக்கு ஈரானில் அதிகரித்து வரும் மரணதண்டனைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோல்வியடைந்து வரும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு, தனது இராணுவத்தின் பெரும்பகுதிக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதுடன், போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும், முன்னெப்போதும் இல்லாத அளவில் அவர்களைக் கொன்று வருகிறது என்றும் அவர் கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு மாபெரும் மனிதாபிமான நெருக்கடி, என்றும் இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும், எனவும் மேலும் கூறியுள்ளார்.
அதிகரித்து வருகின்ற மரணதண்டனை
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து மரணதண்டனைகள் சீராக அதிகரித்து வருகின்றன எனவும் அவர் விளக்கியுள்ளார்.

ஈரானில் மாபெரும் போராட்டங்கள் வன்முறையாக அடக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, போரைத் துவங்கிய அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்கள் நடைபெற்றதில் இருந்து இன்றும் நிறைவடைய போர் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |