கனமழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள் -தாழ்நில பகுதிகளுக்கு கடும் எச்சரிக்கை
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான ஆறுகள் நிரம்பி பெருக்கெடுக்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி களனி ஆற்றுப் படுகையின் மேல் பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹா ஓயாவின் நீர்மட்டம் உயர்வதால் வரதகொல்ல, நாவுல்ல, திவுல்தெனிய, வெலிஹிட ஆகிய கிராம சேவையாளர் பகுதிகள் மற்றும் அலவ்வ, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலகங்களின் தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீதாவகா நதியும் பெருக்கெடுத்து ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நில்வள மற்றும் களு ஆறுகளில் நீர் மட்டம் உயர்வதால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.