பாதாள உலகக் குழு தலைவரை கைது செய்வது போன்று ரிஷாட் கைது- யாரைத் திருப்திப்படுத்தும் நோக்கம்?

arrest mannar press meet rizard sri Lanka bomb blast
By Kalaimathy May 06, 2021 11:17 AM GMT
Report

ஏப்ரல் 21 ஆம் திகதி நடை பெற்ற தாக்குதலை யார் செய்தது? எப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது தலைவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் என மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எம் .எச் .எம். முஜாஹிர் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் நடை பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

எங்களுடைய தலைவர் ரிஷாட் பதியுதீன் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார்.  ஏப்ரல் 21 ஆம் திகதி நடை பெற்ற தாக்குதல் யார் செய்தது? எப்படி செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது தலைவர் எந்த ஒரு தவறும் செய்யாமல் அவர் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டு வெடிப்பின் அடுத்த நிமிடம் ரிஷாட் பதியுதீனின் பெயரை நாடு முழுவதும் பேசினார்கள்.

எமது தலைவர் நாடாளுமன்றத்திற்கு சென்று நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. நீங்கள் விசாரணை செய்து நிரூபித்தால் எனக்கு மரண தண்டணை தாருங்கள் என்று கூறியிருந்தார். இருந்த போதும் இரண்டு வருடங்களாக பல விசாரணைகளை செய்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்பில்லை என அவர்கள் கூறியிருந்தார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.

இரண்டு வருட விசாரணையில் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் நாடாளுமன்ற குழு அதே போல் முன்னாள் பொலிஸ்மா அதிபர் கடந்த நல்லாட்சி அரசாங்கமும் விசாரணை செய்து ரிஷாட் பதியுதீன் குற்றமற்றவர் என்று விடுதலை செய்திருந்தனர். இப்படி இருந்த போது கடந்த சனிக்கிழமை இரவு 3 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சி.ஐ.டி யினர் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்குச் சென்று ஒரு பாதாள உலகக் குழு தலைவரை கைது செய்வது போன்று கைது செய்து இருக்கின்றார்கள்.

இவ்வாறு செய்தது சரியா? என்று நான் கேட்கின்றேன். இந்த நாட்டில் சகல அதிகாரமும் கொண்ட ஜனாதிபதியே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறான தவறினை செய்திருப்பாரா? என்று நீங்கள் சற்று சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் ஏதேனும் நடந்தால் பொறுப்பு கூற வேண்டியவராக சபாநாயகர் இருக்கின்றார். அவருக்கு தெரியாமல் அவருடைய அனுமதி இல்லாமல் சென்று கைது செய்தது தவறு என்று நாங்கள் சொல்கின்றோம்.

அது மட்டுமல்ல நேற்றைய தினம் சபாநாயகர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வாருங்கள் என்று கூறிய பொழுது, அழைத்து வரவில்லை. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றார்கள் கொரோனா தொற்று காரணமாக அவரை அழைத்து வரவில்லை என்று. ஆனால் இன்னும் ஒரு அமைச்சர் கூறுகின்றார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றம் அழைத்துவர முடியாது என்று.

இப்பொழுது நான் கேட்கின்றேன். எங்கே சட்டம் இருக்கின்றது. எங்கே நியாயம் இருக்கின்றது. இந்த அரசு வந்த பின் ஒரு நாட்டில் ஒரு சட்டம் இல்லை. இங்கு பல சட்டங்களும் சர்வாதிகாரமும் தான் நடந்து கொண்டிருக்கின்றது. உலக நாடுகளில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம் நாடுகளும் இந்த விடயத்தில் கண் திறந்து பார்க்க வேண்டும். எமது சிறுபான்மை சமூகத்திற்கு சேவை செய்த ஒரு அமைச்சரை இன்று இல்லாமல் ஆக்க வேண்டும். அவருடைய குரல் வளையை நசுக்க வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து இங்கு சிறையில் அடைத்து இருக்கின்றார்கள்.

எந்த தவறும் செய்யாத ஒருவருக்கு பயங்கரவாத தடை சட்டம் என்ற ஒரு பொய்யை கூறி தடுத்து வைத்திருக்கின்றார்கள். ஜனாதிபதியிடம் நான் ஒன்று கேட்கிறேன். இதை உங்களுடைய அரசியல்வாதிகளுக்காக செய்தார்களா? இல்லா விட்டால் இருக்கின்ற உங்களுடைய மத தலைவர்களுக்காக கைது செய்தார்களா? ஏனெனில் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களுக்கும் தெரியும் இந்த குண்டு தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது? உங்களுடைய அரசியல் இலாபத்திற்காக எங்களுடைய தலைவரை நீங்கள் கைது செய்து வைத்திருக்கின்றீர்கள்.

கடந்த காலம் உங்களுடைய தேர்தல்களில் இந்த தலைவனை கூறித்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் இன்று இந்த அமைச்சரை வளர விடாமல் பல சதிகள் செய்கின்றீர்கள். இருந்த போதும் இந்த வன்னி மாவட்டத்தில் உள்ள மக்கள் அதி கூடிய முதன்மை வாக்குகளால் இந்த அமைச்சரை தெரிவு செய்துள்ளார்கள்.

தற்போதைய அரசு வங்குரோத்து நிலைக்கு செல்கிறது. இந்த ரிஷாட் பதியுதீனை கைது செய்தால் தான் அரசியலில் நிலைத்து நிற்கலாம் என்று நீங்கள் இதை செய்கிறீர்களா? என்று சந்தேகமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் எமது அனைத்து முஸ்லிம் மக்களிடமும் நாங்கள் கேட்பது எங்களுடைய நோன்பு காலத்தில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யப்பட்டிருக்கின்றார். எமக்கு இறைவன் மட்டுமே துணை. அதனால் அவரின் விடுதலைக்காக நீங்கள் இறைவனை மன்றாடுங்கள் என மன்னார் பிரதேச சபை தவிசாளர் மேலும் தெரிவித்தார். 

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி