அமெரிக்காவில் 90 வினாடிகளில் இடம்பெற்ற மிகப்பெரிய திருட்டு
அமெரிக்காவில் (United States) நகை கடையொன்றில் 90 வினாடிகளில் 17.50 கோடி நகைகள் திருடப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மற்றும் தங்க நகைகளுடன் ஆடம்பர கைக்கடிகாரங்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த திருட்டு சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் மேற்கு சியாட்டில் உள்ளது மெனாஷே சன்ஸ் என்ற நகைக்கடையில் இடம்பெற்றுள்ளது.
கடையில் வியாபாரம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடையில் வியாபாரம் இடம்பெற்று கொண்டிருந்த நேரத்தில் முகமூடி அணிந்த நால்வர் கடைக்குள் நுழைந்துள்ளனர்.
இதையடுத்து, கடையில் உள்ள ஊழியர்களை தாக்கிய குறித்த கும்பல் ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரங்களையும் மற்றும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நெக்லசையும் கொள்ளையடித்துள்ளனர்.
திருட்டு சம்பவம்
இதனுடன் அங்கிருந்த தங்க மற்றும் வைர நகைகளையும் அவர்கள் திருடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருட்டு சம்பவம் வெறும் 90 வினாடிகளில் இடம்பெற்றதாகவும் இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

