வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்தொகை பணமோசடி
நீர்கொழும்பில்(Negombo) உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்று ருமேனியாவில்(Romania )வேலை வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வேலை அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் முன்பாக பதற்றமான சூழல் நிலவியது.
ஊடகங்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட நபர்கள், தாங்கள் ரூ. 800,000 முதல் ரூ. 1 மில்லியன் வரை ருமேனியாவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரும் தொகை மோசடி
ஏற்கனவே ரொக்கப் பணம் செலுத்திய 120 விண்ணப்பதாரர்கள் இருப்பதாகக் கூறிய அவர்கள்(வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்), நேற்றைய தினம்(12) அவர்களின் பணி அனுமதி இரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தங்களின் சலுகைக் கடிதங்கள் மற்றும் பணி அனுமதிப் பத்திரங்கள் கிடைத்து, அதற்கான வேலை தொடர்பான நேர்காணல்களை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில், குறித்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இதைத் தங்களுக்குத் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர், நீதிமன்ற வழக்கு முடிவடைந்த பின்னரே தங்கள் பணத்தை மீட்டெடுக்க முடியும் என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |