மற்றுமொரு முக்கிய குற்றவாளி வெளிநாட்டில் கைது : அழைத்து வர பறந்தது விசேட குழு
Sri Lanka Police
Russia
Arrest
By Jaso
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று கூறப்படும் ரொட்டும்பே அமில,ரஷ்ய காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நாளை நாட்டிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் 2025-ல் ரஷ்ய காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
தென் மாகாணத்தை மையமாகக் கொண்ட குற்றச்செயல்கள்
அவரை நாளையதினம் நாட்டிற்கு அழைத்துவர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற கொலைகள், கப்பம் கோரல்கள் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் பலவற்றுக்குத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இவரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |