தெமட்டகொட காவல் நிலைய அதிகாரிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு
Sri Lanka Police
Cold Fever
Colombo Hospital
By Jaso
தெமட்டகொட காவல்துறை அதிகாரிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளில் ஒரு காவல்துறை அதிகாரி, மூன்று காவல்துறை சார்ஜன்ட், ஒன்பது கான்ஸ்ரபிள்கள் மற்றும் ஒரு பெண் கான்ஸ்ரபிள் ஆகியோர் அடங்குவதாக அந்த அலுவலகம் கூறுகிறது.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி
காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக நாரஹேன்பிட்ட காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், அந்தப் பிரதம காவல்துறை அதிகாரியும் பெண் கான்ஸ்ரபிளும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |