ட்ரம்ப் முன்னிலையில் இடம்பெற்ற மோதல் : அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில்(us)ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) முன்னிலையில் பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்(elon musk) மற்றும் வெளியறவு செயலர் மார்க் ரூபியோ(mark rubio) இடையே மோதல் இடம்பெற்றதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வெளியுறவு துறையில் மட்டும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது.
ஊழியர் பணி நீக்கத்தால் வந்த மோதல்
இது தொடர்பாக, எலோன் மஸ்க் - வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில், அண்மையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அப்போது, ''நீங்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை. நீங்கள் பணிநீக்கம் செய்த ஒரே நபர், என் துறையைச் சேர்ந்தவர்,'' என, மார்கோ ரூபியோவை பார்த்து, எலோன் மஸ்க் கிண்டலாக கூறினார்.
சமாளிக்கும் ட்ரம்ப்
இதனால் கோபமடைந்த மார்கோ ரூபியோ, ''எலோன் மஸ்க் உண்மையானவராக இல்லை,'' என்றார். ட்ரம்ப் முன்னிலையில், இருவரும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, ஜனாதிபதி ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், ''எலோன் மஸ்க் - மார்கோ ரூபியோ இடையே எந்த பிரச்னையும் இல்லை. நீங்கள் தேவையில்லாமல் எந்த பிரச்னையையும் கிளப்ப வேண்டாம். எலோன் மஸ்க் - ரூபியோ நட்புடன் பழகி வருகின்றனர். அவர்கள் இருவரும் அற்புதமாக பணியாற்றுபவர்கள்,'' என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்