அடுத்தடுத்து இலங்கைக்கு வரும் ரஷ்ய பிரதிநிதிகள்!
இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ 2026 மார்ச் 31 அன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்த விஜயம், ரஷ்யா மற்றும் இலங்கை இடையிலான 11வது இருதரப்பு அரசியல் கலந்தாய்வுகளில் பங்கேற்பதற்காக நடைபெறுகிறது.
குறித்த கலந்தாய்வுகள், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தூதரக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விரிவான கலந்துரையாடரல்கள்
மேலும் மேற்படி கலந்தாய்வுகளின் போது, அரசியல் தொடர்புகள், பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சுற்றுலா, எரிசக்தி உள்ளிட்ட பல முக்கிய துறைகள் குறித்து விரிவான கலந்துரையாடரல்கள் நடைபெறவுள்ளன.

Image Credit: TASS
அத்தோடு, இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் பற்றியும் அதிகாரிகள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள உள்ளனர்.
இதேவேளை, அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவினும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |