இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க ரஷ்யா ஆர்வம்
Sri Lanka
Russian Federation
By Pakirathan
இலங்கையில் 110 மெகாவாட் சிறிய அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கினால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையில் ஈடுபட ரஷ்யா தயார் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.டகார்யன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஆதரவு
இது தொடர்பில் ரஷ்ய தூதுவர் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உட்பட பல உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவை இலங்கைக்கு வழங்க ரஷ்ய தயாராக உள்ளது" என்று தூதுவர் லெவன் எஸ். டிஜகார்யன் மேலும் கூறினார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்