உக்ரைன் தலைநகரை முற்றுகையிட்ட ரஷ்யப்படைகள்? தலைமறைவான உக்ரைன் அதிபர்!!
உக்ரைன் அதிபர் தனது மாளிகையை விட்டு வெளியேறி ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாகவும் அங்கிருந்தபடி ரஷ்ய தாக்குதல் தொடர்பான தகவல்களையும் மற்ற உத்தரவுகளையும் வெளியிட்டவாறு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவி சென்று கடும் தாக்குதலை நடத்தின. முதல் நாள் விமான தளங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை ரஷ்யா குண்டு வீசி தகர்த்தது.
இரண்டாவது நாளாக நேற்று அதிகாலையிலேயே உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதனால் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் நேற்று ரஷ்யா வசமானது.
அங்கிருந்து தாக்குதலை தீவிரப்படுத்திக் கொண்டு தலைநகர் கீவ் நோக்கி ரஷ்ய படைகள் நகர்ந்தன. நேற்று பிற்பகலில் தலைநகர் கீவ் முழுவதையும் ரஷ்ய படைகள் முற்றுகையிட்டன. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து தலைநகருக்குள் உக்ரைன் ராணுவம் வர முடியாதபடி ரஷ்யா தடையை ஏற்படுத்தியது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்