தரமற்ற பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும்
தரமற்ற இறக்குமதியை மீள் ஏற்றுமதி செய்வதை விட, இறக்குமதி செய்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், சிங்கள, தமிழ் புத்தாண்டு விரைவில் வருகிறது. இது பல்வேறு சடங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பண்டிகை.
அதன் ஒரு பகுதியாக இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று இனிப்புகளை கவனமாக செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தரமற்ற இறக்குமதியை அனுமதிப்பது கடுமையான குற்றம்.
மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் இதை சரிசெய்ய முடியாது. இவற்றை இறக்குமதி செய்த நிறுவனங்கள் அவற்றின் அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். நிறுவனங்கள் புற்றுநோயான தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்து வம்பு செய்கின்றன.
புற்றுநோயற்ற தேங்காய் எண்ணெயை நாட்டிற்கு இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
நண்பர்களை பாதுகாக்கும் அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் பெறுப்பற்று செயற்படுகிறது. இந்த விடயம் குறித்து இந்த நாட்களில் யாரும் கவனம் செலுத்தவில்லை என்ற உண்மை உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகிறது.
இதனால் நாட்டின் கடன் சுமை 560 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது, நாட்டு மக்களின் தனி நபர் கடனை இந்த அரசாங்கம் அதிகரித்தவன்னமுள்ளது. பெற்ற கடனை நாங்கள் டொலர்களில் தான் செலுத்த வேண்டியுள்ளது.
மறுபுறம் ஒரு அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், அடிப்படைப் பாதுகாப்புகளாகும்.
ஆனால் இங்கு சகல பாதுகாப்புகளையும் வழங்குவது போக சாதாரண நடைமுறைகளில் மக்களை அரசு அச்சப்படுத்துகிறது. தரமற்ற எண்னெய் குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று சுட்டிக் காட்டினார்.