ரஞ்சன் விடுதலை! சஜித் - சந்திரிகாவின் கோரிக்கைக்கு வெளிவந்த கோட்டாபயவின் முடிவு
Sajith Premadasa
Chandrika
Ranjan Ramanayaka
Gotabaya
SriLanka
By Chanakyan
சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படவுள்ளார் என்ற செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய இதுவரை அதுபற்றிய முடிவினை தனக்கு இன்னும் அறிவிக்கவோ கலந்துரையாடவோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க இன்று அல்லது விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ருவிட்டர் தளத்தில் அண்மையில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு ரஞ்சனுக்காக கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.