ரணிலிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு! இணைந்து செயற்பட சாத்தியமுள்ளது - ஹரீன் தகவல்
srilanka
sajith
harin fernando
ranil
samagi jana balawegaya
By Vasanth
ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நான் எனது கட்சி தலைவரிடம் இதனை தெரிவித்தேன் அவரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணைந்து பணியாற்ற முடியுமா என்பதை பார்க்க விரும்பினார்.
எங்கள் பொதுச்செயலாளர் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தார், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் பிரதிதலைவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு முடிவை காணுமாறு தெரிவித்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி