யாழில் எதிர்க்கட்சித் தலைவர் - பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்பு (படங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சஜித் பிரேமதாச பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
அதில் ஒரு கட்டமாக யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து, நயினாதீவுக்கு விஜயம் செய்த அவர் நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டதுடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார்.
இதன்போது, சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலனி பிரேமதாச, மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் கட்சியின் பிரதிப் பொது செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தெல்லிப்பளை தள வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி வைக்கவுள்ளார். பின்னர் திருநகரில் அரசியல் கூட்டமொன்றினை தொடர்ந்து மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளசினேக பூர்வ கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளர்.
இதன் பின்னர் யாழ் மாவட்டத்திலுள்ள வியாபாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








