22-க்கு எதிராக கொழும்பில் போராட்டத்தில் குதிக்கும் சஜித் படை
அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (24) கொழும்பில் நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக, நீதிமன்றத்தைத் தொடாதீர்கள் என்ற கருப்பொருளின் கீழ், இந்த ஆர்ப்பாட்டம் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.
இந்த விடயத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
போராட்டத்திற்கு அழைப்பு
ஜனநாயகத்தை மதிக்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகப் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய இளைஞர் அமைப்பு, ஐக்கிய மகளிர் அமைப்பு, பொது சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ள உள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |