தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றுக்கு திறன் வகுப்பறை வழங்கிய சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் (Sajith Premadasa) முல்லைத்தீவு (Mullaitivu) இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு திறன் வகுப்பறை மற்றும் கணனிகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமான நிதியில் குறித்த திறன் வகுப்பறை மற்றும் ஐந்து கணணிகள் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.
திறன் வகுப்பறை
இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு திறன் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்துள்ளார்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாச்சந்திரபிரகாஸ், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் மு.லக்சயன், கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்