சஜித் உள்ளிட்டவர்களுக்கு பகிரங்கமாக அழைப்பு
சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் எம்முடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்பண்டார.
தாய் வீட்டுக்கு வருவதற்கு வெட்கப்படத் தேவையில்லை எனவும் பாலித ரங்கே பண்பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியை கிராம மற்றும் மாவட்ட மட்டத்தில் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் டிசம்பர் மாதமாகும் போது ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகளை முந்திக்கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
நாங்கள் எமது கட்சியை பலப்படுத்திக்கொண்டு வேகமாக முன்னுக்குச் செல்லவேண்டும் என அவர் மேலும் கூறினார்.