அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு : கிடைக்கப்போகும் தீர்வு
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட சம்பள ஆணைக்குழு, அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிகளுக்கு தகுந்த வேட்புமனுக்கள் ஏற்கனவே பெறப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
சம்பள ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ள அதிகாரம்
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள சம்பள முரண்பாடுகள், சம்பளப் பிரச்சினைகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்த ஆணைக்குழு எதிர்காலத்தில் தலையிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சம்பளப் பிரச்சினைகள் உள்ள இடங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அவற்றின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் வரவழைத்து, அந்தப் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமும் சம்பள ஆணைக்குழுவிற்கு வழங்கப்படும்.
சம்பள ஆணைக்குழுவின் இந்த அமைப்பு, கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட ஒரு முன்மொழிவின் நிறைவேற்றமாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |